பெருமளவு கசிப்பு மற்றும் கோடாவுடன் யாழ். பலாலியில் சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணம், பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலிட்டி பகுதியில் 120 லீற்றர் கசிப்பு மற்றும் 800 லீற்றர் கோடாவுடன் 37 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பலாலி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கருத்துக்களேதுமில்லை