33 வருடங்களின் பின் புதுப்பொலிவுபெறும் காங்கேசன்துறை ஞானவைரவர் ஆலயம்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய கும்பாபிஷேகம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் புதன்கிழமை மாலை 3 மணியளவில் கணபதி ஹோமத்துடன் பூஜை வழிபாடுகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆலயம் கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இருந்த நிலையில் , கடந்த ஜூன் மாத கால பகுதியில் ஆலய சூழலையும், அதனை அண்டிய சில பிரதேசங்களில் இருந்தும் இராணுவத்தினர் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.