ரவிராஜ் எம்.பியை கொலைசெய்தவர் யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன்! மனோ கணேசன் எச்சரிக்கை

‘முன்னாள் நாடாளுமன்று உறுப்பினர் ரவிராஜைக் கொலை செய்தது யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன்’ என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளவை வருமாறு –

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் பற்றிய செய்திகள்  அண்மையில் அம்பலமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜைக்  கொலை செய்ய உத்தரவிட்டவர், மற்றும் கொலையாளி யார் என்பது தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்துவேன் என மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்நிலையில் மனோ கணேசன் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் சர்ச்சைய  ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.