ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறப்பு: தியாகி அறக்கொடை நிறுவுநர் நிதியுதவி!
ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் பிள்ளைகளை பிரசவித்துள்ள கம்பஹா வியாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதான மதுகீ லக்சிகா இசுறூ பெரோரா தம்பதியினருக்கு நாட்டின் பொருளாதார நெருக்கடி மிக்க சூழ் நிலையை கருத்தில் கொண்டு குழந்தைகளுக்கான பராமரிப்பு நிதியுதவிகள் தியாகி அறக்கொடை நிதியத்தால் திங்கட்கிழமை வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஆறு குழந்தைகளை கடந்த வாரம் கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் திருமதி மதுகீ லக்சிகா இசுறூ பெரோரா பெற்றெடுத்துள்ளார். துரதிஷ்டவசமாக ஒரு குழந்தை தனது நுரையீரலில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக இறந்துள்ளதாக வைத்தியர்கள் உறுதி செய்துள்ளார்.
இக்குடும்பத்தின் நிலைமை குறித்து ஸ்ரீP லங்கா மீடியா பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம். பாரிஸ் தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான வாமதேவன் தியாகேந்திரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு இணங்க முதல் கட்டமாக ஒரு லட்சம் ரூபா நிதியுதவித்தொகை இக் குழந்தைகளின் பராமரிப்புக்காக தியாகி அறக்கொடை நிதியத்தின் இணைப்பாளரும், ஸ்ரீலங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம். பாரிஸ் அவர்கள் மூலம் குறித்த தம்பதியினரிடம் கொழும்பு காசல் மகளிர் வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்தியர் ஏ.தந்த நாராயன முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் இக் குழந்தைகளின் பராமரிப்புக்காக மாதாந்த 25 ஆயிரம் ரூபா நிதியுதவியை தொடர்ச்சியாக குறிப்பிட்ட காலங்களுக்கு வழங்குவதற்கு நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை