பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரியதீர்வு கிடைக்கவேண்டும்! வடிவேல் சுரேஷ் தொழில் திணைக்கள ஆணையாளரிடம் வலியுறுத்து
கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற கம்பனியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களால் தொடர்ந்தும் நடத்தப்படுகின்ற அஹிம்சை வழி போராட்டம் தொடர்பில் பல சுற்றுவட்ட பேச்சுகள் நடைபெற்றன.
அந்த வகையில் கொழும்பு தொழில் திணைக்களத்தில் தொழில் ஆணையாளர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் –
கேகாலை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்குகின்ற கம்பனிகளில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் லாப கொடுப்பனவு தொடர்பான பிரச்சினையை மத்தியஸ்தர் சபையின் ஊடாகத்; தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு மேற்குறிப்பிட்ட தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்கள் தொழிலுக்கு சென்றும் வேலை வழங்காமல் பெருந்தொட்ட நிறுவனத்தால் வேலை நிறுத்தப்பட்டிருந்த 21 நாள்கள் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் வேதனம் ஆயிரம் ரூபா கணக்கிட்டு 21 ஆயிரம் ரூபா கொடுக்கப்பட வேண்டும் என்பதைத் தொழில் ஆணையாளர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பில் தொழில் ஆணையாளர் அதிகாரிகள் உரிய தோட்டங்களுக்கு விஜயம் செய்து உண்மைத் தன்மையை ஆராய்ந்து உடனடியாகக் கொடுப்பனவை வழங்குவதற்கு சிபாரிசு செய்வதாக தொழில் ஆணையாளர் உறுதி அளித்தார்.
மேலும், 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு இணங்க பெருந்தோட்டத் தொழிலாளி ஒருவர் ஒரு நாளைக்கு 8 மணித்தியாலம் வேலை செய்தால் கட்டாயமாக ஒரு நாள் வேதனமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்.
வர்த்தமானியில் கிலோகிராம் தொடர்பில் எதுவிட அறிக்கையும் இல்லை என தொழில் ஆணையாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்க ரீதியில் நமக்கும் கிடைக்கப்பெற்ற பாரியதொரு வெற்றியாக நான் இதனை காண்கின்றேன் எனக் கருத்துரைத்தார்.
கருத்துக்களேதுமில்லை