கல்லூண்டாய் குடியேற்றத்திட்ட மக்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு!

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றது.

புதன்கிழமை காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அலுவலகத்தில் நவாலி கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 54 குடும்பங்களுக்கான காணி உரிமைப் பத்திரம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தவால் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ்ப்மாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன், காணி மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகன், மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்தன் குணதிலாக மற்றும் துறைசார் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.