மட்டக்களப்பில் தீப்பந்தங்களை ஏந்தி கவனயீர்ப்புப் போராட்டம்!
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்றைய தினம் மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது மின்சாரக்கட்டணத்தை குறைக்குமாறும், பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்குமாறும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை