கடன் வழங்கிய சகலரையும் சமமாக நடத்தவேண்டுமாம்! அமெரிக்கா ‘அட்வைஸ்’
கடன் வழங்கிய அனைவரையும் இலங்கை சமமாக நடத்தவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே தான் இதனைத் தெரிவித்ததாக அமெரிக்க தூதுவர் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டியதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையைப் பெறுவதற்கான முயற்சியில் முன்னேற்றம் கண்டுள்ளமைக்கு அவர் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டின் போது சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பினரிடமிருந்தும் வெளிப்படைத்தன்மை அவசியம் என்றும் அமெரிக்கத் தூதர் கூறியுள்ளார்.
இலங்கையில் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியை உறுதிசெய்து, நியாயம், வெளிப்படைதன்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றை மதிக்கும் ஒரு பொருளாதார சூழல் குறித்து அமெரிக்கா உறுதியுடன் இருப்பதாகவும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை