‘டக் டிக் டோஸ்’ இசை வெளியீடு!

‘டக் டிக் டோஸ் ‘ முழு நீள திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

இலங்கையைச் சேர்ந்த பிரபல இயக்குநரான ‘ராஜ் சிவராஜின் இயக்கத்தில், பூவன் மதீசனின் இசையமைப்பில் உருவாகியுள்ள இத் திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இதற்கு முன்னர் இவர்களது  கூட்டணியில் வெளியான ‘புத்தி கெட்ட மனிதர்கள் எல்லாம்’ என்ற திரைப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்ததோடு, வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றிருந்தது.

இந்நிலையில், மீண்டும் இவர்களின் கூட்டணியில் வெளியாகவுள்ள ‘டக் டிக் டோஸ்’திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.