தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் மீண்டும் ஆரம்பம்!
உயர் பாதுகாப்பு வலயத்தின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, தையிட்டி பகுதியில் மக்களது காணிகளை சுவீகரித்து சட்டவிரோத திஸ்ஸ விகாரையானது அமைக்கப்பட்டது.
இந்த விகாரைக்கு காணியின் உரிமையாளர்கள் உட்பட பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தின.
இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் குறித்த விகாரையில் போயா தினமான இன்று வழிபாடுகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை