பயணப் படகு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று விஜயம் செய்துள்ளார்.

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு பயணத்தை மேற்கொள்ளும் படகுகளுக்கு இறங்கு துறையில் இடங்கள் ஒதுக்கப்படாததால் , படகுகளை கரை சேர்ப்பதற்கும் தரித்து நின்று பயணிகளை ஏற்றுவதிலும் இடர்களை எதிர்கொண்டு வருவதாக படகு உரிமையர்கள் மற்றும் பொதுமக்கள் இதன்போது விசனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம் செய்திருந்தார்.

நெடுந்தீவு மற்றும் நயினாதீவிற்கு இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் படகு உரிமையாளர்கள் , கடற்படையினர் மற்றும் துறை சார் அதிகாரிகளை குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு நேரில் அழைத்து எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பில் இந்த விஜயத்தின் போது பேசப்பட்டது.

படகுகளுக்கு இறங்குதுறையில் இடம் ஒதுக்குதல் , தரித்து நிற்கும் நேரம் , சேவையில் ஈடுபடுவதற்கான நேர அட்டவணை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.