போதைக்கு அடிமையாகி சொந்த வீட்டையே எரித்த இளைஞன் காத்தான்குடியில் கைது!

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் இளைஞர் ஒருவர் சொந்த வீட்டை தானே தீ வைத்து எரித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக 27 வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீட்டர் போல் உத்தரவிட்டார்.

தீ வைக்கப்பட்ட வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பராகியுள்ளன எனக் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம்.ஏ.றஹீம் தெரிவித்தார்.

போதைவஸ்து பாவனையின் எதிரொலியே இச்சம்பவம் இடம்பெறக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, கைதானவர் ஐஸ் மற்றும் போதைவஸ்துக்கு அடிமையானவர் என இளைஞரின் தந்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.