மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக தீப்பந்தம் ஏந்தி புலத் சிங்களவில் மக்கள் ஆர்ப்பாட்டம்!
புலத்சிங்கள பகுதியில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப் பகுதி மக்கள் தீ பந்தம் ஏந்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
புலத்சிங்கள தேசிய மக்கள் படையின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன அமரசேகரவின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணத்தைக் குறைக்க முடியாவிட்டால் துறைசார்ந்த அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும், அமைச்சர்களின் மின் கட்டணத்தை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை