பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை 6 மாதங்களுக்குள் முற்றாக நிறுத்தத் திட்டம்!
பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை எதிர்வரும் 6 மாதங்களுக்குள் முற்றாக நிறுத்துவதற்கு பொலிஸார் திட்டமிட்டுள்ளனர் என மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பாதாள உலக செயற்பாடுகள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து வழிநடத்தப்படுகின்றமை தற்போது தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், பொதுமக்களையும் வர்த்தகர்களையும் அச்சுறுத்தும் நபர்கள் தொடர்பில் தகவல் இருப்பின் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொதுமக்களிடம் வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை