யாழ்ப்பாணத்தில் பயணிகள் பஸ் குடைசாய்ந்து விபத்து

யாழ்ப்பாணம் – கொடிகாமம் – பருத்தித்துறை பயணிகள் பஸ் இன்று செவ்வாய்க்கிழமை (31)  காலை  குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பயணிகளுடன் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு குடைசாய்ந்துள்ளது என அறியமுடிகிறது.

கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த பஸ் குடைசாய்ந்துள்ளதாக அறியமுடிகின்றது.

இதன்போது சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதோடு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.