கொஸ்கமவில் பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயம் !
கொஸ்கம பகுதியில் பயணிகள் பஸ் ஒன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் நேற்று திங்கட்கிழமை (30) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் கூறினர்.
கொஸ்கம – அளுத் அம்பலம பகுதியில் நிலவிய அதிக மழையுடனான வானிலையை அடுத்தே குறித்த மரம் முறிந்து விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பஸ் ஒன்றின் மீதே மரம் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் விபத்தில் காயமடைந்த மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு, கொள்ளுப்பிட்டிப் பகுதியில் நேற்று மரம் ஒன்று காரொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை