ஆயிரத்து 500 குடும்பநல சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்களைப் பணிக்கமர்த்த முடிவு! ரஞ்சித் சியம்பலாபிட்டிய தகவல்
உடனடியாக சுமார் 1500 குடும்பநல சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்களை பணிக்கு அமர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நேர்முகத் தேர்வுகளில் சித்தியடைந்து மூன்று வருட காலமாக வேலை வாய்ப்புக்காக எதிர்ப்பார்ப்புடன் இருக்கும் குடும்பநல சுகாதார சேவைகள் உத்தியோகத்தர்கள் குழு ஒன்று இப்பணி அமர்விற்கு தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் மேலும் அவர் கூறினார்
கருத்துக்களேதுமில்லை