மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக மீன்கள் பிடிபடுவதாவல் கருவாடு உற்பத்தி அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவிலான கடல் மீன்கள் பிடிபடுவதால் மீன்களின் விலைகள் அதிகளவில் குறைவடைந்துள்ளன.

அதிகளவிலான கீரி மற்றும் அறுக்களா,பாரை மீன்கள் பிடிக்கப்படுவதால் மிகக்குறைந்த விலையில் பொதுமக்கள் மீன்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

3000 ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ அறுக்களா மற்றும் பாரை மீன்கள் தற்போது ஒரு கிலோ 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

600 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கீரி மீன் 200 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் கருவாடு உற்பத்தி செய்வதில் மீனவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஒரு கிலோ கீரி கருவாடு 600 முதல் 700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.