மஸ்கெலியா புரவுன்ஷீக் பகுதியில் வீதி தாழ் இறங்கியது
பலத்த மழை காரணமாக மஸ்கெலியா பொலிஸ் பிரிவிலுள்ள பிரவுன்சிக் தோட்டம், கெஸ்கீபன் பிரிவிற்கு செல்லும் பிரதான வீதி நேற்று செவ்வாய்க்கிழமை (31) தாழ் இறங்கியுள்ளது.
இதனால் அப் பகுதியில் உள்ள சின்ன நடுத்தோட்டம், லெட்சுமி தோட்டம், பாளுகாமம் ஆகிய பிரிவுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பலத்த மழை பெய்யும் பட்சத்தில் அப்பகுதி பாரிய அளவில் தாழ் இறங்கும் அபாயம் உள்ளது என அப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதி அருகில் சாமிமலை ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் எந்த நேரத்திலும் இப்பகுதி பாரிய அளவில் தாழ் இறங்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை