திருகோணமலை தோப்பூர் பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம் ..!
திருகோணமலை – தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று புதன்கிழமை (01) தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் “எங்களுக்கான ஐந்து நாள் வேலைத் திட்டத்தை வழங்கு, மேலதிக நேர கொடுப்பனவை வரையறை இன்றி வழங்கு, சீருடை கொடுப்பணவை 15 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்கு, மின்சார கட்டண அதிகரிப்பை இரத்துச் செய், அரசே மருந்துத் தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய், விசேட கொடுப்பனவை 7,000 ரூபாயாக அதிகரித்து வழங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சுலோகங்களை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
தோப்பூர் பிரதேச வைத்தியசாலை சிற்றூழியர்கள்களின் கவனயீர்ப்பு போராட்டத்தால் வைத்திய சேவை பெற வருகை தந்த நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை