வான் மீது மரம் வீழ்ந்தமையால் மஹியங்கனையில் மூவர் காயம்!

கண்டி – மஹியங்கனை பிரதான வீதியில் பல்லேகல பிரதேசத்தில் வியாழக்கிழமை வான் மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் வானில் பயணித்த மூவர் காயமடைந்துள்ளனர் என பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தால் வீதிக்கு அருகில் இருந்த பெட்டிக்கடை ஒன்று சேதமடைந்துள்ளது.

தொடர்சியாக பெய்த கடும் மழை காரணமாக குறித்த மரம் வீழ்ந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வீதியில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து சேவைகளுக்காக மாற்று வீதிகளை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்தனர்.

மரத்தை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.