சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வு திட்டத்தை நேர்மையாக முன்னெடுப்பது தமிழரசு கட்சியே! இரா.சாணக்கியன் இடித்துரைப்பு
சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி மாத்திரமே எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற கிழக்கின் சிவந்த சுவடுகள் எனும் நூலின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல் தீர்வு மற்ற விடயம் எங்களுடைய பொறுப்புக் கூறல் இந்த இரண்டு விடயங்களில் பிரதானமான விடயங்களாக முன்னெடுத்துக் கொண்டு செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது சமகால அரசியலைப் பொறுத்த வரையிலே எத்தனையோ பிரதானமான கட்சிகள் இருந்தாலும் சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நேர்மையாக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் ஒரே ஒரு கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி மாத்திரமே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இலங்கை அரசாங்கத்தால் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கபட்ட வன்முறைகள் தொடர்பாக சர்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை