11 ஆயிரம் நுண்கடன் நிதி நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் மாத்திரமே பதிவுசெய்தன!  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் தகவல்

நுண்கடன் நிதி நிறுவனங்களின் முறையற்ற செயற்பாடுகளினால் சுமார் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டில் 11 ஆயிரம் நுண்கடன் நிதி நிறுவனங்கள் இயங்குகின்ற நிலையில் அவற்றில் 05 நிறுவனங்கள் மாத்திரமே பதிவு செய்துள்ளன.

நுண்கடன் நிறுவனங்களைக் கண்காணிப்பதற்கு நுண்கடன் நிதி நிறுவன அதிகார சபை ஸ்தாபிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

மஹரக பகுதியில்  இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டவை வருமாறு –

நுண்கடன் நிதி நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் சர்வதேச மட்டத்தில் பேசப்படுகின்றன. நுண்கடன்களை முன்னிலைப்படுத்திய தற்கொலைகள், முரண்பாடுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் சமூகக் கட்டமைப்பில் காணப்படுகின்றன.

நுண்கடன் நிதி நிறுவனங்களின் முறையற்ற செயற்பாடுகளால் சுமார் 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாட்டில் 11 ஆயிரம் நுண்கடன் நிதி நிறுவனங்கள் இயங்குகின்ற நிலையில் அவற்றில் 05 நிறுவனங்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

பதிவு செய்ய பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்கள் தான் முறையற்ற வகையில் செயற்படுகின்றன. நிதி நிறுவனங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயப்படுத்தும் சட்டமூலம் எதிர்வரும் மாதமளவில் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

பதிவு செய்யாத நிறுவனங்கள் 05 லட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும். தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் 5 வருடகால சிறைத்தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.

நுண்கடன் நிதி நிறுவனங்களைக்; கண்காணிக்கும் வகையில் நுண்கடன் கண்காணிப்பு அதிகார சபை அடுத்த ஆண்டு ஜனவரி மாதமளவில் ஸ்தாபிக்கப்படும். இதனைத் தொடர்ந்து சகல நுண்கடன் நிதி நிறுவனங்களும் மத்திய வங்கியால் நேரடியாகக் கண்காணிக்கப்படும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.