தன்னுடன் சேர்த்து ஓட்டோக்கும் பண்டாரகமவில் தீ வைத்த நபர்!

நபரொருவர்  தனக்;கும் தனது ஓட்டோவுக்கும் தீ வைத்த  சம்பவம்  பண்டாரகம ஹத்தாகொட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை, தற்போது ஹொரணை ஆரம்ப வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக அந்நபர்  இத்தவறான முடிவினை  எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபரின் ஓட்டோவும் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.