ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்!
உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்திருக்கும் கலாசார மத்திய நிலையத்தில் கலைப்பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், மிருதங்கம், வயலின், நாடகமும் அரங்கியலும், ஓகன், சித்திரமும் வடிவமைப்பும், சிங்களம் ஆகிய பாடநெறிகள் கற்பிக்கப்படவுள்ளன.
இதற்காக உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் மேற்படி பாடங்களைக் கற்பிக்கக்கூடிய தகுதி வாய்ந்த ஆசிரியர் களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
கற்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தங்களது சுய விவரங்களை இந்த மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் ‘நிலையப் பொறுப்பதிகாரி, கலாசார மத்திய நிலையம், கற்பொக்கனை பிள்ளையார் கோயிலடி, உடுவில்’ என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. (05)
கருத்துக்களேதுமில்லை