திருத்தந்தையை சந்தித்த இலங்கை ஆயர் பேரவையினர்

இலங்கை ஆயர் பேரவையினர் திருத்தந்தை பிரான்சிசை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஐந்தாண்டுக்கு ஒருமுறை உரோமை சென்று திருத்தந்தையை சந்திப்பது வழக்கமாக மாகும். இதன் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இம் முக்கியத்துவம் வாய்ந்த திருப் பயணத்தில் இலங்கையின் வடக்கு – கிழக்கு ஆயர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

இதன் போது இலங்கை கிறிஸ்தவ திருச்சபையின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால விவகாரங்கள் குறித்து பாப்பரசருக்கு தெரிவிக்கப்பட்டதுடன், பரிசுத்த பாப்பரசரின் ஆலோசனைகளையும் பெற்றார்.

இந்த திருப்பயணமானது ‘Ad Limina Visit’ என திருச்சபையால் அழைக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.