கொழும்பில் பிரபல பாடகியின் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்
கொழும்பின் புறநகர் பகுதியான மாலபே பகுதியில் உள்ள பிரபல பாடகி நிரோஷா விராஜினியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பதில் நீதவான் கமல் விஜேசிறி உத்தரவிட்டுள்ளார்.
இவர் இதற்கு முன் பலமுறை பாடகியின் வீட்டுக்குள் நுழைய முயன்றுள்ளார்.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய நீண்ட விசாரணைகளை மேற்கொண்ட மாலபே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் ரத்நாயக்க தலைமையிலான குழுவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை