வடமாகாண ஆளுநருக்கும் ஜப்பான் தூதுவருக்கும் இடையே விஷேட சந்திப்பு!

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஆகியோருக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஜப்பான் தூதுவரின் இல்லத்தில் விசேட சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது.

இச்சந்திப்பில் வட மாகாணம் தொடர்பான பல்வேறு விடயங்கள்  குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஜப்பான் அரசின் சார்பில், வடபகுதியின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் என்று தூதர் உறுதி அளித்தார் என்று வடமாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.