வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த லொறியில் திருட்டு
கம்பஹா – ஜாஎல வீதியில் வெள்ளத்தால் சூழ்ந்துள்ள அகரவிட்ட பகுதியில் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த லொறி ஒன்றில் இருந்து இரும்புகள் மற்றும் ஒக்சிஜன் சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த லொறியானது பதுளை பிரதேசத்தில் இருந்து ஜாஎல நோக்கி இரும்புகள் மற்றும் ஒக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச் சென்றுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய இந்த லொறியை இரண்டு நாட்களாகியும் அகற்ற முடியாத நிலையில் மற்றொரு லொறியின் உதவியுடன் லொறியின் பொருட்களை அகற்ற முற்பட்ட போது ஐந்து இரும்புகள் மற்றும் ஏழு ஒக்சிஜன் சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ளதாக லொறியின் உரிமையாளர் அடையாளம் கண்டுள்ளார்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் லொறியின் உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை