பாதீட்டில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை நடைமுறைப்படுத்த முடியுமா என்பது சந்தேகமே! ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டு
வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி பல யோசனைகளை முன் வைத்துள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதே எமது கேள்வியாக உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதி முன்வைத்து உரையாற்றியதையடுத்து அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
கடந்த வருடம் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட வரவு – செலவுத் திட்ட யோசனைகளில் 90 வீதமானவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை நாம் அறிவோம்.
அதேபோன்று அரசாங்கத்தால் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டு வரும் கடன் மறுசீரமைப்பு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அதனை நடைமுறைப்படுத்தாமல் வேறு எதையும் முன்னெடுக்க முடியாது.
வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி சிறந்த விடயங்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். எனினும் அரசாங்கத்தால் அதனை நடைமுறைப்படுத்த முடியுமா? என்பதே கேள்வியாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை