இலங்கை குடும்பத்தினர் மீது இனவெறி தாக்குதல்

அவுஸ்திரேலியாவில் மாற்றுத்திறனாளியான மகளுடன் பலாரட் நகரிற்கு சென்ற இலங்கையர் ஒருவர் இனவெறி தாக்குதலிற்கு இலக்கானமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவின் பலாரட் நகரிற்குமாற்றுதிறனாளியான தனது மகளுடன் சென்ற இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர்

நுகககும்புர குடும்பத்தினர் மாற்றுத்திறனாளியான தனது 12 வயது அனுலியுடன் மெல்பேர்னிற்கு மிகவும் சவாலான பயணத்தை மேற்கொண்டிருந்தனர் – அனுலி சக்கரநாற்காலியிலேயே சென்றார்.

ஒரு இடத்திற்கு சென்றுவிட்டு நாங்கள் காரில் திரும்பிக்கொண்டிருந்தவேளை இளைஞர்கள் குழுவொன்று எங்களை நோக்கி சத்தமிட தொடங்கினர் இரும்புசங்கிலி போன்ற ஒன்றை எனது மகளின் முகத்தை நோக்கி வீசினார்கள் என துசித நுகககும்புர தெரிவித்துள்ளார்.

நான் உங்களுக்கு என்ன பிரச்சினை என கேட்டேன் அதற்கு என்னை நோக்கி வந்த ஒருவர் என்னை தாக்கதொடங்கினார் என துசித தெரிவித்துள்ளார்.

நான் எனது குடும்பத்தினரை காருக்குள் ஏற்றுவதற்கு முயற்சி செய்துகொண்டு என்னை பாதுகாக்கவேண்டிய நிலைக்கு உள்ளானேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் காவல்துறையினரை தொடர்புகொள்ள முயன்றேன் இதனை அறிந்த அவர்கள் என்னை தாக்குவதை விட்டுவிட்டு பேருந்தில் ஏறிச்சென்றுவிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் அதிர்ச்சியடைந்துள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் ஒரு தசாப்தத்திற்கு முன்னரே மெல்பேர்ன் வந்துள்ளோம் இளைஞர்கள் இனவெறி கூச்சல் எழுப்பியதை எனது மகளின் பராமரிப்பாளர் கேட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.