கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபரின் மணிவிழா நிகழ்வு சிறப்பாக முன்னெடுப்பு!

கிளிநொச்சி மாவட்ட பிரபல பாடசாலையான கிளிநொச்சி மகாவித்தியாலய முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கத்தின் மணிவிழா நிகழ்வு வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வு காலை 9 மணியளவில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வைத்தியர் குகராஜா தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து, மணிவிழா நாயகியான பாடசாலை முதல்வருக்கு மலர் மாலை அணிவித்து பாடசாலை மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

தொடர்ந்து வாழ்த்துரைகளும், கௌரவிப்புகளுடம் இடம்பெற்றதுடன், கலை நிகழ்வுகளும் விழா மண்டபத்தில் இடம்பெற்றன.

இந்த மணிவிழா நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும், குறித்த பாடசாலையின் முன்னைநாள் அதிபருமான சி.சிறிதரன், மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, அதிபர்கள், ஆசிரியர்கள், ஓய்வுநிலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.