தெனியாயவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் விபத்து : பஸ் நடத்துனருக்கு காயம்
இரத்தினபுரி – தெனியாயவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (17) அதிகாலை விபத்துக்குள்ளானது .
தெனியாயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று வாதுவ பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வைத்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் பஸ்ஸின் மிதி பலகையில் பயணித்த பஸ் நடத்துனர் காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
விபத்தின் போது மின்கம்பம் மற்றும் தொலைபேசிக் கம்பம் ஆகியன உடைந்துள்ளதுடன், அருகில் இருந்த இரண்டு வீடுகளின் சுவர் மற்றும் வீட்டின் வாயில் முற்றாக சேதமாகியுள்ளது.
இந்த விபத்தில் பஸ் பலத்த சேதமடைந்துள்ளதுடன், அதிக வேகத்துடன் பயணித்தமை காரணாகவே குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை