எனக்கு எதிரான பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவியை துறப்பேன் : ரஞ்சித் பண்டார எம்பி!

எனக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள பாலியல் இலஞ்சக் குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை (20) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,

தாம் நாடாளுமன்றத்தில் இல்லாத நேரத்தில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்ததன் மூலம் எம்.பி என்ற வகையில் எனது சிறப்புரிமைகள் பாரியளவில் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பில் சபாநாயகருக்கு எழுத்துமூல அறிவித்தல் வழங்கியுள்ளதாக தெரிவித்த ரஞ்சித் பண்டார, சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் உரிய குற்றச்சாட்டை ஆராயுமாறும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றச்சாட்டில் தாம் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாகவும், குற்றச்சாட்டை முன்வைத்த உறுப்பினர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் ரஞ்சித் பண்டார மேலும்  கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.