தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்துக்குப் புதியநிர்வாகம் தெரிவு!
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகசபைத் தெரிவும் நடைபெற்றது.
தலைவராக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.தேவநேசனும் செயலாளராக ஊடகவியலாளர் லயன் சி.ஹரிகரனும் பொருளாளராக தாதிய உத்தியோகத்தர் த.ரதீசனும் உபதலைவராக தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முதல்வர் தி.வரதனும், உப செயலாளராக தாதிய பரிபாலகி செல்வி துரைசாமி திலகவதியும் தெரிவுசெய்யப்பட்டனர்.
பொதுமக்கள் தரப்பிலிருந்து 8 நிர்வாகசபை உறுப்பினர்களும் வைத்தியசாலைத் தரப்பிலிருந்து 5 நிர்வாகசபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.
கருத்துக்களேதுமில்லை