சர்வதேசத்துக்கு அரசு வழங்கிய வாக்குறுதிகளை மீறி விட்டதாம்! பீரிஸ் குற்றச்சாட்டு
புதிய சட்டம் உருவாக்கப்படும் வரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்ப் போவதில்லை என சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறி விட்டதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் மீறி, தமக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அரசாங்கம் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள நிலையில் வாக்குறுதியை மீறி விட்டு புதிய வாக்குறுதிகளை வழங்கினால் அதனை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளாது என்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
சர்வதேசத்துடன் இணக்கமாக செயற்படுகிறோம் என்று பேச்சளவில் குறிப்பிடுவதால் மாத்திரம் முன்னேற்றமடைய முடியாது என்றும் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் தலையிடும் சூழலை நல்லாட்சி அரசாங்கமே உருவாக்கியது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். (05)
கருத்துக்களேதுமில்லை