கொக்குவில் நாமகள் வித்தியாலய மாணவர்கள் நாடாளுமன்று விஜயம்! சுமந்திரன் எம்.பியின் ஒழுங்கமைப்பில்

 

கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலய மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (சனிக்கிழமை) இலங்கை நாடாளுமன்ற அமர்வுகளைப் பார்வையிட்டனர்.

பாடத்திட்டத்தில் முக்கிய விடயமாக இருக்கும் மாணவர் நாடாளுமன்றம் கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலயத்தில் மிகவு‌ம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பாடசாலை மாணவர் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் மாணவர்கள் இன்றைய தினம் இலங்கை பாராளுமன்ற அமர்வை முழுமையாக பார்வையிட்டனர்.

பழைய மாணவர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் சிவமோகன்(கண்ணன்) அவர்களின் நிதி அனுசரணையில் இந்ந விஜயம் இடம்பெற்றது.

மாணவர்களை விசேடமாக வரவேற்ற யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மாணவர்களுக்கு சிற்றுண்டி, நாடாளுமன்ற சுற்றுலா மற்றும் ஏனைய ஏற்பாடுகளை விசேடமாக எமது மாணவர்களுக்கு ஒழுங்கு செய்து வழங்கியதுடன் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பாக மாணவர்களுக்குக் கருத்துக்களையும் வழங்கினார்.

அத்துடன் நாடாளுமன்ற செயற்பாடுகள் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மாணவர்கள் சந்திக்க வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.