மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் கௌரவிப்பு!
கல்முனை பிராந்திய மலேரியா தடை இயக்க பிரிவின் நலன்புரிச் சங்கத்தினால், ”மலேரியா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் சுகாதாரப் பணியாளர்களைக் கௌரவிப்பு நிகழ்வு கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றது.
வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.நௌஷாத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.பீ.அப்துல் வாஜித், சுகாதார பணியாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த சுகாதார பணியாளர்களின் பிள்ளைகளும் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.
கருத்துக்களேதுமில்லை