வெள்ளம் பாதித்த வன்னி மக்களுக்கு சர்வதேச லயன்ஸ் கழகத்தால் உதவி!

 

லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி 1 இன் ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றரின் துரித முயற்சியால் சர்வதேச லயன்ஸ் கழக எல்.சி.ஐ.எவ். நிதியத்திடம் இருந்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் (32 லட்சத்து 50 ஆயிரம் இலங்கை ரூபா) நிதியுதவியில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பாரியளவில் வெள்ள அனர்த்த உலருணவுப் பொதிகள் செவ்வாய்க்கிழமை காலை கிளிநொச்சி செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டன.

கிளிநொச்சி சிற்றி லயன்ஸ் கழக உறுப்பினர் ஆர்.ஜெயசுதர்சனின் துரித முயற்சியால் ஆளுநர் சர்வதேசத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்தச் செயற்றிட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு 3 ஆயிரத்து 250 ரூபா பொதி படி 1000 பொதிகள் பொதியிடப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்துக்கு 500, முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 350, மன்னார் மாவட்டத்துக்கு 150 என வழங்கப்பட்டன. இவை முறைப்படி வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸின் ஒழுங்கமைப்பின் ஊடாக அந்தந்த மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் ஊடாகப் பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு அந்தந்தப் பிரதேச கழகங்கள், லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர், ஆளுநர் சபை பிரதானிகள் ஊடாக வழங்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.