மந்தாரம் நுவரவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார் பிரதமர் தினேஷ்!
பிரதமர் தினேஷ் குணவர்தன மந்தாரம் நுவரவுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது பிரதேசத்துடன் தொடர்புடைய விடயங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவை பாதிக்கும் விடயங்கள் குறித்து மக்கள் பிரதமருடன் பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன் கலாசாரத்தை பாதுகாத்து சுற்றுலா துறையை மேம்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருள்களை காலாவதியாகாமல் பிரதான சந்தைக்கு கொண்டு செல்ல பொருளாதார மையமொன்றின் தேவையை அவர்கள் பெரிதும் வலியுறுத்தினர்.
சிறுவர்கள், இளைஞர்கள் விளையாட விளையாட்டு மைதானம், குடிநீர், வீதி வசதி உள்ளிட்ட பல உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இலங்கையின் மிக அழகான மற்றும் தனித்துவமிக்க மலைப்பகுதியை நாடும் உலகமும் கண்டு மகிழும் வகையில் பாதுகாப்பதற்காக தாங்கள் பாடுபடுவதால் மக்களின் தனித்துவங்கள் கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களுக்குப் பாதிப்பில்லாமல் குறிப்பாக மதுப்பாவனை இல்லாத வகையில் சுற்றுலா துறையை தங்கள் பகுதியில் மேம்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
மந்தாரம் நுவர என்பது இலங்கையின் மிக உயரமான மலையான பிதுருதலாகலாவின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் வினோதமான கிராமம் ஆகும்.
கருத்துக்களேதுமில்லை