பிக்மீ சாரதி மீதும் வாடிக்கையாளர் மீதும் பிறிதொரு ஓட்டோ சாரதியால் தாக்குதல்!

செவ்வாய்க்கிழமை பிக்மீ சாரதி ஒருவர் கோண்டாவிலில் உள்ள ரயில் நிலையத்துக்கு அருகில் வைத்து மற்றும் ஒரு ஓட்N;டா சாரதியால் தாக்கப்பட்டார்.

குறிப்பிட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை மதியம் இரண்டரை மணியில் இருந்து 3.30 மணிக்குள் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார். இவர் மட்டும் இல்லாமல் இவரை அழைத்த பிரயாணியும் குறிப்பிட்ட மற்றைய சாரதியால் தாக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் –

குறித்த பகுதியில் இருந்த பயணிகள் இருவர் பிக்மீ  மூலம் ஓட்டோவை வாடகைக்கு அமர்த்தினார். இதன்போது குறித்த ஓட்டோ சாரதி வாடிக்கையாளர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு செல்ல முற்பட்டவேளை அவ்விடத்திற்கு வந்த மற்றொரு ஓட்டோ சாரதி அவர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அத்துடன் பயணியையும் தாக்கியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சாரதி தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.