மயிலிட்டி கோல்டன் ஸ்ரார் லயன்ஸால் இலவச கண்புரை சத்திர சிகிச்சைகள்!

மாவட்டம் 306 பி1 மயிலிட்டி  கோல்டன் ஸ்ரார் லயன் கழகத்தின் சிறந்த சாதனை செயற்றிட்டங்களில் ஒன்றான  கண்புரை சத்திர சிகிச்சை கடந்த ஞாயிற்றுக்கிழமை 5 பேருக்கு மேற்கொள்ளப்பட்டது.

மயிலிட்டி கோல்டன் ஸ்ரார் லயன்ஸ்கழகச் செயலாளர் லயன் இரா ஜெயக்குமாரின்  ஒழுங்குபடுத்தலில் 4 லட்சம் ரூபா பெறுமதியில் இந்தச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாணம் எஸ்.ரி.எஸ். வைத்தியசாலையில்  விசேட கண்சிகிச்சை வைத்திய நிபுணர் லயன் வைத்தியகலாநிதி சந்திரகுமாரால் இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.