தமிழ் சி.என்.என். குழுமத்தினர் தமிழரசு தலைவருக்கு வாழ்த்து!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் இன்று (21) இடம்பெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின்போது 47 மேலதிக வாக்குகளினால் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் போட்டியிட்டிருந்தனர்.
இதன்போது எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகளையும், சிவஞானம் ஸ்ரீதரன் 184 வாக்குகளையும் பெற்றதோடு சீனித்தம்பி யோகேஸ்வரன் எவ்வித வாக்குகளையும் பெறவில்லை.
ஆரம்பத்தில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்ற மூவருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டுவதற்கான நேரம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இணக்கப்பாடு எட்டப்படாததன் காரணமாக வாக்களிப்பு இடம்பெற்றது.
குறித்த வாக்களிப்பில் 321 பேர் வாக்களித்திருந்தனர்.
எனினும் குறித்த வாக்களிப்பில் மத்தியகுழு உறுப்பினர்கள் 43 பேரும், மேலதிகமாக 9பேரும், தொகுதிவாரியாக 280 பேர் (யாழ்ப்பாணம் – 75, கிளிநொச்சி – 20, முல்லைத்தீவு – 25, மன்னார் – 25, வவுனியா – 20, திருகோணமலை – 30, மட்டக்களப்பு – 50, அம்பாறை – 35) உட்பட 332 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் சி.என்.என். குழுமம் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை