பொது இணைக்கப்பாட்டுடனான திட்டங்களை நடைமுறைப்படுத்த எந்த தடையும் கிடையாது! இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறுகிறார்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் தமக்கு ஒதுக்கப்படும் நிதியில் தமது யோசனையின் கீழான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எந்த தடையும் கிடையாது. மாவட்ட, பிரதேச அபிவிருத்தி குழு மற்றும் கிராம மட்டத்தில் இடம்பெறும் கூட்டங்களில் இணைந்து பொது இணக்கப்பாட்டுடனான யோசனைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான உரிமை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில் –
வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்த குழுவினர் அதன் நன்மைகளை பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ள போது பலாத்காரமாக அதன் பங்காளிகளாகியுள்ளதுடன் அவர்கள் வரவு செலவு திட்டத்தை எதிர்த்தாலும் மக்கள் பிரதிநிதிகளாக குழுக்களில் கலந்துகொண்டு மக்கள் இணக்கப்பாட்டுடன் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு எந்தத் தடையும் கிடையாது.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் ஒத்துழைப்பை குறைவாக மதிப்பிட முடியாது.
மாவட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பல வருடங்களுக்குப் பின் பிரதேச அபிவிருத்திக்கென 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் தெரிவு செய்யப்பட்டுள்ள 91பிரதேச செயலாளர் பிரிவுகளுக்காக மேலும் 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தின் ஊடாக மாவட்ட இணைப்புக் குழு தலைவர்கள் மற்றும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. நேர்மையான வகையில் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் அந்த ஆலோசனைகள் அமைந்துள்ளன. – என்றார்.
கருத்துக்களேதுமில்லை