நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு – ரஸ்யா ஆதரவு!
இலங்கையின் சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் புவிசார் அரசியல் மோதலில் சிக்குண்டுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை கண்டித்துள்ள அதேவேளை ரஸ்யா வரவேற்றுள்ளது.
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முற்றிலும் ஓர் உள்நாட்டு விடயம் என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் லெவன் ஜகர்யான் தெரிவித்துள்ளார்.
இலங்கை நிறைவேற்றியுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்த விடயங்களை ரஸ்யா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் உள்நாட்டிலிருந்தும் சர்வதேச அளவிலும் வெளியாகும் கருத்துக்களை உன்னிப்பாக அவதானிப்பதாக ரஸ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முற்றிலும் உள்நாட்டு விடயம் எனத் தெரிவித்துள்ள அவர், உள்நாட்டு விடயங்களில் வெளிநாடுகள் தலையிடுவது முற்றிலும் அவசியமற்ற ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் எனவும் தெரிவித்துள்ளார்
கருத்துக்களேதுமில்லை