சம அந்தஸ்தை எமக்கும் வழங்குக! ரெலோ சிறிதரனிடம் கோரிக்கை
தமிழ் மக்களுக்காக அரசியல் கட்சிகளிடையே ஏற்படுகின்ற ஐக்கியமானது, அந்தந்த அரசியல் கட்சிகளுக்கு சம அந்தஸ்தை வழங்குவதாக இருப்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக கூட்டமைப்பின் ஜனநாயகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.
– இவ்வாறு ரெலோ தலைவரும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிpவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
ரெலோவைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கத்தின் போதே அதன் ஆரம்பக் கட்சிகளில் ஒன்றாகப் பங்கெடுத்திருந்தது. அன்றுமுதலே நாம் ஐக்கியத்துக்காக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.
ஆனால், தமிழ் மக்களுக்காக அரசியல் கட்சிகளிடையே ஏற்படுகின்ற ஐக்கியமானது, அந்தந்த அரசியல் கட்சிகளுக்கு சம அந்தஸ்தை வழங்குவதாக இருப்பது மிகவும் முக்கியமானது. குறிப்பாக கூட்டமைப்பின் ஜனநாயகத்தன்மை, மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.
ஆகவே, தான் கடந்த காலத்தில் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அதற்கு ஒருபொதுவான சின்னம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.
தற்போதும் அவ்விதமான நிலைப்பாட்டியேலே உள்ளோம். எம்மைப்பொறுத்தவரையில், அரசியல் கட்சிகளிடையே தேர்தல்கால ஐக்கியத்தை விடவும் வலுவான தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்பாக இருக்க வேண்டுமாயின் ஆகக்குறைந்தது மேற்குறிப்பிட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதே பொருத்தமானது.
இலங்கைத் தமிழரசுக்கட்சி, தனது வீட்டுச்சின்னத்தை விட்டுக்கொடுப்பதற்கு தயாரில்லாத மனநிலையைக் கொண்டிருக்குமாயின் அத்தரப்பினர் அதனை பொதுச்சின்னமாக ஏற்றுக்கொள்வதற்காகவாவது நெகிழ்வுத்தன்மையுடன் தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
இந்நிலையில், புதிய தலைவரின் அழைப்பினை நாம் சாதகமாக பார்க்கும் அதேநேரம், இந்தவிடயங்களை உள்வாங்கி நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது நாம் கலந்துரையாடுவதற்கு தயாராகவே உள்ளோம். – என்றார்
கருத்துக்களேதுமில்லை