அரசியல் இலாபத்திற்காக புதிய சட்டமூலம் பயன்படும் ரஞ்சித் மத்தும பண்டார எச்சரிக்கை
தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் இணையப்பாதுகாப்புச் சட்டத்தை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தக்கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –
மக்களை ஒடுக்குவதற்காக அரசாங்கம் புதிய சட்டங்களை கொண்டுவருகிறது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக, நீதிமன்ற அனுமதியின்றி ஒருவரை தடுத்து வைக்க முடியும்.
நீதிமன்றத்துக்கு இருக்கும் அதிகாரம், இந்தச் சட்டத்தின் ஊடாக பதில் பொலிஸ் மா அதிபருக்கு செல்லும்.
தீர்மானிக்கும் அதிகாரம் பாதுகாப்புச் செயலாளருக்கு சென்றுவிடும்.
பாதுகாப்புச் செயலாளர் என்பவர் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் அதிகாரியாவார்.
எனவே, தேர்தல் ஒன்று இடம்பெறவுள்ள நிலையில் இந்தச் சட்டத்தை அரசியல் இலாபத்திற்காக இவர்கள் பயன்படுத்தக்கூடும்.
இதனை பயன்படுத்தி மக்களை இவர்கள் ஒடுக்குவார்கள். அதேபோன்றுதான், இணையப் பாதுகாப்புச் சட்டமூலத்தையும் இவர்கள் கொண்டுவந்துள்ளார்கள்.
இதன் ஊடாக ஐவர் அடங்கிய ஆணைக்குழுவொன்று ஜனாதிபதியால் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இந்த ஆணைக்குழு எவ்வாறு சுயாதீனமாக இயங்கும்? ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவும் அரசியல் குழுவாகத்தான் செயற்படும். – என ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்தார்
கருத்துக்களேதுமில்லை