கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவு கிழக்குப் பல்கலையில்!
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் ஸ்ரீலங்கா இராணுவத்தால் 28.01.1987 ஆம் ஆண்டு சுட்டு படுகொலை செய்யப்பட்ட 83 அப்பாவி தமிழ் உறவுகளின் நினைவேந்தல் கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால் பொங்கு தமிழ்த் தூபியில் முன்பாக ஈகைச்சுடரேற்றி முன்னெடுக்கப்பட்டது.
கிழக்குப் பல்கலைகழகத்தின் அனைத்துப் பீட தமிழ் மாணவர்களால் குறித்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை