வாய்த் தர்க்கம் கொலையாகியது சுன்னாகம் கந்தரோடையில் துயரம்

யாழ்ப்பாணம் – சுன்னாகம் கந்தரோடை பகுதியில் கொலைச் சம்பவம் நடந்த பகுதியில் மல்லாகம் நீதிவான், சுன்னாகம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

செவ்வாய்க்கிழமை இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிவடைந்துள்ளது.

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, அயலவர்களான உறவினர்கள் இருவருக்கும் இடையில் கோழி வளர்ப்பால் பிரச்சினைகள் நிலவி வந்துள்ளன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமையும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது முற்றி கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளது.

அதில் கத்திக்குத்துக்கு இலக்கான நபர் உயிரிழந்தமையை அடுத்து , கொலை சந்தேகநபரான 57 வயதுடைய அயலவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரை சுன்னாகம் பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.