விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்
ஹஸ்பர் ஏ.எச்
திருகோணமலை மாவட்டத்தின் மொறவௌ பிரதேச செயலாளர் ஆ.நவேஸ்வரன் தலைமையில் திட்ட மேலாண்மை குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) மொறவௌ பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கலந்துரையாடலில் மொறவௌ உதவி பிரதேச செயலாளர் சத்யப் பிரியா, நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய சம்மேளன பிரதிநிதிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை